ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கையெழுத்து இயக்கம்

கீழையூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கையெழுத்து இயக்கம் நடந்தது.

Update: 2022-10-03 18:45 GMT

வேளாங்கண்ணி:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியனுக்கு ஓய்வு கால பலன்களை முழுமையாக வழங்க வலியுறுத்தி கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கையெழுத்து இயக்க போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜம்ருத்ரிஷா, மாநில மகளிர் குழு உறுப்பினர் வளர்மாலா , வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் தங்களது ரத்தத்தினால் கோரிக்கை பிரசுரத்தில் கையெழுத்திட்டு சென்னை அரசு தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தனர்.இதில் மாவட்ட பொருளாளர் ராஜகண்ணன், மாவட்ட துணை தலைவர்கள் சிங்காரவேல், பிச்சுமணி, வட்டாரப் பொறுப்பாளர்கள் மணிவண்ணன் வெங்கடேசன் மற்றும் கணினி உதவியாளர் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்