ஊரக வளர்ச்சி அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-13 18:54 GMT

திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் கே.எம்.நேரு தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைப்பாளர் ராஜா தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊரக வளர்ச்சிதுறையில் நடைமுறைக்கு சாத்தியமற்ற இலக்குகளை விதித்தும், முறையான திட்டமிடல் இன்றி திட்டப் பணிகளை நடைமுறைப்படுத்தி ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களை பாழ்படுத்தும் அதிகாரிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமன், வசந்தி, மாலதி உள்படபலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்