பள்ளிகளில் ஊரக வளர்ச்சி அதிகாரி ஆய்வு

குளித்தலை ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஊரக வளர்ச்சி அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2023-08-17 18:00 GMT

குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டமேடு அரசு ஆதிதிராவிட நல பள்ளி, தண்ணீர்பள்ளி மற்றும் வை.புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காலை உணவு திட்டத்திற்கான கட்டிடத்தை ஊரக வளர்ச்சி இயக்கக தலைமை பொறியாளர் (சென்னை) ஹரிகிருஷ்ணன் பார்வையிட்டார்.

வை.புதூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடப் பணிகளை அவர் பார்வையிட்டு உரிய அளவீட்டில் பள்ளி கட்டப்படுகிறதா? என்பதை அளந்து பார்த்தார். அதுபோல தரமான முறையில் அந்த கட்டிடம் கட்டப்படுகிறதா? என்பதையும் ஆய்வு செய்தார். பின்னர் மணத்தட்டை ஊராட்சிக்குட்பட்ட எழுநூற்றுமங்களம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சமுதாயக்கூட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அதே பகுதியில் உள்ள பள்ளி மற்றும் பள்ளி சமையலறை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்து பணிகளையும் அவர் பார்வையிட்டார். கட்டுமான பணிகளை தரமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்போது மாவட்ட திட்ட இயக்குனர் வானிஈஸ்வரி, குளித்தலை உபகோட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் சரவணன், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்