ஊரக வளர்ச்சி, ஊராட்சி அலுவலர்களுக்கான மருத்துவ முகாம்

விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி அலுவலர்களுக்கான மருத்துவ முகாமை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-05 18:45 GMT

விழுப்புரம்:

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கான மருத்துவ முகாம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா அனைவரையும் வரவேற்றார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு ரத்தப்பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, வாய் புற்றுநோய் பரிசோதனை, தொற்றாநோய் கண்டறிதல், காசநோய், தொழுநோய் பரிசோதனை, கண் பரிசோதனை, பல் மருத்துவம் போன்ற பரிசோதனைகள் எடுக்கப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு மேல்சிகிச்சை ஏதேனும் தேவை இருப்பின் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்யப்படும் என்றார்.

இம்முகாமில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பொன்னம்பலம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்