ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் திடீர் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-04 19:15 GMT

காஞ்சீபுரத்தில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலரை பணியின் போது மிகவும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதை கண்டித்து அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்