மாணவ-மாணவிகள் கிராமிய முகாம்

திருக்கடையூர் அருகே சமூக பணித்துறை மாணவ-மாணவிகள் கிராமிய முகாம் நடந்தது

Update: 2022-09-26 18:45 GMT

திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சரபோஜி ராஜபுரத்தில் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி சமூகப் பணித்துறை மாணவ- மாணவிகள் சார்பில் கிராமிய முகாம் மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் மரக்கன்று நடும் விழா நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவ உதவி இயக்குனர் முத்துக்குமாரசாமி, தோட்டக்கலை உதவி இயக்குனர் ரமேஷ், கால்நடை உதவி மருத்துவர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமின்போது கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் செயற்கை முறை கருவூட்டல் ஊசி, ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் ஆகிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. தோட்டக்கலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் பல்வேறு சமூக பணிகள் நடந்தன. இதில் 63 சமூகப் பணித்துறை மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்