தொழிலாளியிடம் ரூ.10 ஆயிரம் பறிப்பு; 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2022-11-04 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் அருகே உள்ள பெலத்தூரை அடுத்த பட்டவாரப்பள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36). தொழிலாளி. சம்பவத்தன்று இவர், புனுகன்தொட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு வந்த 2 பேர், பிரகாசை கத்தி முனையில் மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து பிரகாஷ் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரகாசிடம் பணத்தை பறித்து சென்றது, புனுகன்தொட்டியை சேர்ந்த சிவா என்கிற ஆர்.டி.ஆர்.சிவா (27), வெங்கடேசபுரம் சீனா (27) என தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்