இருளப்பட்டி காணியம்மன் கோவிலில் ரூ.2.13 லட்சம் உண்டியல் காணிக்கை

இருளப்பட்டி காணியம்மன் கோவிலில் ரூ.2.13 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.

Update: 2022-09-08 17:22 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்துவதற்காக உண்டியல்களில் காணிக்கைகளை செலுத்துவா். இந்த உண்டியல்களின் காணிக்கை திருவிழாவிற்கு பிறகு ஊர் கவுண்டர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. கடந்த மாதம் தேர்த்திருவிழா நடந்து முடிந்தது. இதையடுத்து உண்டியல் முதன்முறையாக, இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல் அலுவலர் ராதிகா தலைமையில், இருளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குமார், துணைத்தலைவர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து சமுதாய ஊர் கவுண்டர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் கோவில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்பட பலர் ஈடுபட்டனா். இதில் ரூ.2 லட்சத்து, 13 ஆயிரத்து, 948 ரொக்கம், 20 கிராம் தங்கம், காணிக்கையாக கிடைக்கப்பெற்றது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்