பொள்ளாச்சி -போத்தனூர் இடையே 110 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்
பொள்ளாச்சி -போத்தனூர் இடையே 110 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
கிணத்துக்கடவு
பொள்ளாச்சி -போத்தனூர் இடையே 110 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அதிவேக சோதனை ஓட்டம்
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் வரை மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருந்தது. இந்த ெரயில் பாதை கடந்த 2009-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த வழித்தடம் தற்போது மின் மயமாக்கப்பட்டுள்ளது. தற்போது கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி, மதுரை மற்றும் வாரம் ஒருமுறை வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மேட்டுப்பாளையம், நெல்லையிலிருந்து சிறப்பு ரெயில்களும் பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் அனைத்து ரெயில்களும் சராசரி 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வழித்தடத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து கூடுதலாக ெரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வரை ரெயில் அதிவேக சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது தண்டவாளத்தின் அதிர்வுகள், உறுதித் தன்மை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டது. நேற்று மாலை 3.50 மணிக்கு அளவில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திலிருந்து 3 பெட்டிகளுடன் என்ஜின் பொருத்தப்பட்டு கிளம்பிய ரெயில் 4 மணிக்கு கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தை மின்னல் வேகத்தில் கடந்தது.
ஆய்வறிக்கை
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- பொள்ளாச்சி போத்தனூர் வழித்தடத்தில் தற்போது சராசரியாக 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க இன்று (நேற்று) ரெயில் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஒரு என்ஜின் மூன்று பெட்டிகள் கொண்ட ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. சராசரியாக 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டும். தற்போது போத்தனூர்- பொள்ளாச்சி இடையே 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல சுமார் 1 மணி நேரம் ஆகிறது. 100 கிலோமீட்டர் தூர வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும் போது போத்தனூர்-பொள்ளாச்சி இடையே 25 நிமிடத்தில் சென்றுவிடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து ரெயில்வே ஆர்வலர்கள், போத்தனூர்- பொள்ளாச்சி வழித்தடம் அகல ெரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்னர் ெரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ெரயில்களின் வேகத்தை அதிகரித்தால் கூடுதலாக இந்த வழித்தடத்தில் ெரயில்களை இயக்க முடியும். எனவே நிர்வாகம் ெரயில்களின் வேகத்தை அதிகரிக்க உயர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.