மனித உருவத்தில் ஆட்டுக்குட்டி பிறந்ததாக பரபரப்பு

பரமக்குடி அருகே மனித உருவத்தில் ஆட்டுக்குட்டி பிறந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-28 18:45 GMT

பரமக்குடி,

ராமநாதபுரம் பரமக்குடி அருகே உள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். விவசாயி. இவர் 20 ஆடுகளை வீட்டில் வளர்த்து வருகிறார். அதில் ஒரு ஆடு சினையாக இருந்துள்ளது. நேற்று அந்த ஆடு பிரசவித்த போது மனித உருவ வடிவத்தில் ஆட்டுக்குட்டி பிறந்ததாம்.. அதற்கு இரண்டு கண்கள், இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களும் இருந்தனவாம். இதை பார்த்த சண்முகம் அதிர்ச்சி அடைந்துள்ளார். சிறு குழந்தை படுத்து இருப்பது போல் அந்த ஆட்டுக்குட்டி இருந்துள்ளது. இது பற்றிய தகவல் அறிந்ததும் கிராம மக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து சென்றுள்ளனர். ஆனால் அந்த ஆட்டுக்குட்டி பிறந்த சில மணி நேரத்திலேயே இறந்து விட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய தகவல் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்