சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை அணியும் விழா

சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை அணியும் விழா நடைபெற்றது.;

Update: 2023-09-13 18:47 GMT

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு அடுத்த மாதம் (அக்டோபர்) 22-ந்தேதி எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை அணியும் விழா நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் சிவனடியார்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்