உறைகிணறு அமைக்கும் பணியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆய்வு

களக்காடு சிதம்பராபுரத்தில் உறைகிணறு அமைக்கும் பணியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2023-06-04 20:04 GMT

இட்டமொழி:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ., களக்காடு சிதம்பராபுரம் கிராமத்தில நிலவிவந்த குடிநீர் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக சட்டசபையில் பேசி கொண்டு வந்த உறைகிணறு அமைக்கும் திட்டத்திற்கான வேலைகள் முழுமையாக முடிவடையாமல் தற்போது பாதியில் நிற்பதை கேள்விப்பட்டு உடனே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து உறைகிணறு அமைக்கும் திட்டத்தை முடித்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க கேட்டுக்கொண்டார். மேலும் சிதம்பராபுரத்தில் கபடி விளையாடும் சிறுவர்களுக்கு டீ-சர்ட் வழங்கினார்.

அப்போது, முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர் கக்கன், நகர தலைவர் ஜார்ஜ் வில்சன், வட்டார தலைவர்கள் அலெக்ஸ், வாகைதுரை, கவுன்சிலர் மீகா, கோவிலம்மாள்புரம் பஞ்சாயத்து தலைவர் முத்துராமலிங்கம் உள்பட பலர் உடன் சென்றனர்.

மேலும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., இட்டமொழி மின்பகிர்மான பகுதிக்கு உட்பட்ட விஜய அச்சம்பாடு இந்து உயர்நிலைப்பள்ளி வழியாக கடையன்குளம் கிராம இணைப்பு சாலையின் குறுக்கே செல்லும் மின்கம்பத்தின் பகுதி சிதிலமடைந்து, மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக சென்றது. எப்போது வேண்டுமானாலும் அது சாலையில் விழுந்து விடும் என்ற நிலையில் அந்த சாலையின் வழியாக செல்லும் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடன் அந்த சாலையை கடந்து சென்றனர். இதுகுறித்து உடனே இட்டமொழி இளநிலை மின்பொறியாளரை தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக அந்த மின்கம்பிகளை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று உடனடியாக மின்சார வாரியம் சார்பாக புதிதாக மின்கம்பங்கள் நடப்பட்டு மின்கம்பிகள் இணைக்கப்பட்டது.

களக்காடு சிதம்பராபுரம் நாராயணசாமி கோவிலில் உச்சிபடிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோவில் சார்பாக எம்.எல்.ஏ.வுக்கு தலைப்பாகை கட்டி மரியாதை செய்யப்பட்டது.

ஒடிசா ெரயில் விபத்தில் பலியானவர்களுக்கு களக்காட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

Tags:    

மேலும் செய்திகள்