காயம் அடைந்த சிறுவனுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உதவி

களக்காடு அருகே விபத்தில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உதவி செய்தார்.

Update: 2022-10-03 21:57 GMT

இட்டமொழி:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் களக்காட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு களக்காட்டில் இருந்து நாங்குநேரிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது களக்காடு பொத்தைசுத்தி கிராமத்தில் வசிக்கும் வெங்கடேஷ்-சுமதி ஆகியோரின் மகன் சுடலைமுத்து (வயது 5) தன் தாத்தாவுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, சுடலைமுத்து தூக்கத்தில் சைக்கிள் சக்கரத்தில் கால் சிக்கி காயம் அடைந்து மிகவும் அவதிப்பட்டதை அறிந்து நேரில் பார்த்தார். பின்னர் சிறுவனை உடனடியாக களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை அளிக்கும்படியாக கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்