ரப்பர் ஷீட் திருட்டு

திருவட்டார் அருகே ரப்பர் ஷீட் திருட்டு

Update: 2023-03-14 18:54 GMT

திருவட்டார், 

திருவட்டார் அருகே உள்ள திருவரம்பு சாத்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ஜான்றோஸ் (வயது 60). இவர் ரப்பர் ஷீட் வியாபாரம் செய்து வருவதுடன், வெளியூர்களுக்கு ரப்பர் ஷீட்டுகளை மொத்தமாக ஏற்றுமதியும் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் பின்புறம் 40 கிலோ ரப்பர் ஷீட்டுகளை உலர வைத்து இருந்தார்.

 இரவு தூங்க சென்ற ஜான்றோஸ் மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது உலர வைத்திருந்த ரப்பர் ஷீட்டுகள் மாயமாகி இருந்தது. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் ரப்பர் ஷீட்டுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி ஜான்றோஸ் திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.

 அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்