பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆர்.டி.ஓ.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆர்.டி.ஓ.;
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப்புத்தூரில் வருகிற 12-ந் தேதி கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இதனை முன்னிட்டு செஞ்சேரிப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை என பல்வேறு உதவிகளை கேட்டு 118 மனுக்களை அளித்தனர். இதில் சூலூர் தாசில்தார் நித்திலவல்லி, மண்டல துணை தாசில்தார் மணிகண்டன், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.