கூடலூர் நகராட்சியில் ஆர்.டி.ஓ. நேரில் ஆய்வு
கூடலூர் நகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பதாரர்களிடம் ஆர்.டி.ஓ. நேரில் ஆய்வு செய்தார்.
கூடலூர் நகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளிலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்களை அனைத்து வார்டு பகுதிகளிலும் நகராட்சி ஊழியர்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள வார்டுகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பதாரர்களிடம் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி, துணை தாசில்தார் ஜாகிர்உசேன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.