நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி
தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் 33 இடங்ளில் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆர்.எஸ்.எஸ். கோரிய மனுவில் போதிய தகவல்கள் இல்லை. எனவே அணிவகுப்பால் சட்டம், ஒழுங்கு பாதிக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அறிக்கையை சுட்டிக்காட்டி காவல்துறை தெரிவித்தது.
அணிவகுப்பால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் அளிக்க வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியது. இதையடுத்து இரு தரப்பையும் விசாரித்த ஐகோர்ட்டு காவல்துறை நிபந்தனைகளை ஏற்று இரு நாட்கள் 33 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.
சுப்ரீம்கோர்ட்டு பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றி அணிவகுப்பு நடத்தலாம். சீருடை இல்லாமல் பேரணியில் யாரையும் அனுமதிக்கக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.