ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்

அகஸ்தியன்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்

Update: 2023-04-16 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்து அகஸ்தியன்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்றனர். அகஸ்தியன்பள்ளி அகஸ்தியர கோவிலில் இருந்து இந்த அணிவகுப்பு ஊர்வலம் சேதுரஸ்தா தெற்கு வீதி, கீழ வீதி, வடக்கு வீதி, மேல வீதி வழியாக விழா மேடையை வந்தடைந்தது. பின்னர் தெற்கு வீதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு செல்வகணேசன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். ஜில்லா கார்யவாஹ் சித்திரவேல் வரவேற்றா. கூட்டத்தில் தென் தமிழக மாநிலத் தலைவர் ஆடலரசன் சிறப்புரை ஆற்றினார். இந்த ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்