181 பயனாளிகளுக்கு ரூ.7.15 கோடி கடன் உதவி

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் வங்கி அனைத்து கிளைகள் சார்பில் 181 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 15 லட்சத்தில் கடனுதவியை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.

Update: 2023-01-20 16:55 GMT

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் வங்கி அனைத்து கிளைகள் சார்பில் 181 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 15 லட்சத்தில் கடனுதவியை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.

வங்கி கிளை திறப்பு

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாக தரைதளத்தில் மாவட்டத்தின் 20-வது இந்தியன் வங்கியின் 20-வது கிளை திறப்பு, மின்னணு சேவை மற்றும் முதல்தளத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலுவலகம் திறப்பு மற்றும் அனைத்து இந்தியன் வங்கி கிளைகளின் சார்பில் அரசின் பல்வேறு திட்டங்களில் மானியக் கடனுதவி திட்டங்களின் கீழ் 181 பயனாளிகளுக்கு ரூ.7.15 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா கலந்து கொண்டு வங்கி கிளையை திறந்து வைத்தும், கடன் உதவிகளை வழங்கியும் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் மாவட்டத்தில் 19 இந்தியன் வங்கி கிளைகள் செயல்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் வங்கி மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலுவலகம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் வங்கி இருப்பதினால் அனைத்து அரசு அலுவலர்களுக்கும், அரசின் சார்பில் விரைவில் வங்கி பரிவர்த்தனை செய்ய உதவியாக இருக்கும். மேலும் இந்தியன் வங்கி மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலுவலகம் இரண்டும் செயல்படுவதால் பொதுமக்களுக்கு வங்கி கடன் மற்றும் வங்கி சார்பில் உள்ள குறைகளை விரைவாக தீர்வு காண முடியும். காலதாமதம் ஆகாமல், வங்கி கடன் வேண்டி கோரிக்கை அளிக்கும் அனைத்து பொது மக்களுக்கும் விரைவில் வங்கி கடன் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து அனைத்து இந்தியன் வங்கி கிளைகளின் சார்பில் பல்வேறு அரசு மானியக் கடனுதவி திட்டங்களின் கீழ் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 70 குழுக்களுக்கு ரூ.4.80 கோடி மதிப்பிலான கடனுதவி, உள்ளிட்ட பல்வேறு கடன் உதவி 181 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே15 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

வங்கி கணக்கு

முன்னதாக கலெக்டர் பெயரில் முதல் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, வங்கி கணக்கு புத்தகம் வழங்கப்பட்டது. மேலும் இந்தியன் வங்கியின் சார்பில் 1000 மரக்கன்றுகளை பொது மக்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கு.செல்வராசு, மண்டல மேலாளர் என்.பிரசன்னகுமார், உதவி மேலாளர் ஹரிநாத், வேலூர் முதன்மை மேலாளர்கள் ராஜூவ், கவின், பாதுகாப்பு அதிகாரி முருகேசன், வணிக அதிகாரி சுகந்தன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் அரவிந்த், அனைத்து இந்தியன் வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை மேலாளர் விக்னேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்