ஓட்டல் நிர்வாகம் ரூ.5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்- நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு

நெல்லையில் ஐஸ்கிரீம் மாற்றி கொடுத்த ஓட்டல் நிர்வாகம் ரூ.5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்- நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு

Update: 2023-02-15 21:32 GMT

நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து ராஜா (வயது 23). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் நண்பருடன் சேர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் மில்க் வித் ஐஸ்கிரீம் 2 ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஊழியர் ஐஸ்கிரீமை மாற்றி கொடுத்துள்ளார். இதனால் அவர் வேறு வழியின்றி, தனது விருப்பப்படி ஐஸ்கிரீம் சாப்பிட முடியாமல், ஊழியர் மாற்றி கொடுத்ததை சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டதால் மனுதாரருக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேச்சிமுத்து ராஜா, நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வக்கீல் பிரம்மா மூலம் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதி கிளாட்ஸ்டன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம், பேச்சிமுத்து ராஜாவுக்கு நஷ்டஈடாக ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவு பிறப்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்