ரூ.4 லட்சம் கையாடல்; வாலிபர் கைது

ரூ.4 லட்சம் கையாடல்; வாலிபர் கைது;

Update: 2022-12-29 18:45 GMT

ராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் சாயல்குடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 33) என்பவர் கடன் வசூல் செய்யும் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனக்கு கீழ் பணியாற்றும் கடன் வசூலிப்பு நபர்களிடம் அவர்கள் சேகரித்த பணம் மற்றும் இவர் சேகரித்த பணம் ஆகியவற்றை கடந்த சில மாதங்களாக நிறுவனத்தில் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இவ்வாறு சுமார் ரூ.4 லட்சத்தை ராஜ்குமார் கையாடல் செய்திருந்தாராம். தணிக்கையின் போது ராஜ்குமாரின் மோசடி தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து நிறுவன மேலாளர் ராஜாராம் என்பவர் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன கோபால் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்