பறவைகளை வேட்டையாடிய 2 பேருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்

பறவைகளை வேட்டையாடிய 2 பேருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-12-04 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க கோடியக்கரைவனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் வனவர்கள் ராமதாஸ், வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், வேட்டை தடுப்பு காவர்கள், நிர்மல்ராஜ், பாண்டியன் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர்கள் நேற்று தலைகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது துளசாபுரம் கிராமத்தில் வயல்வெளியில் வலைவைத்து மடையான் பறவைகளை வேட்டையாடிய திருத்துறைபூண்டியை சேர்ந்த வீரகுமார் (வயது21), விஸ்வநாதன் (26) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்