விக்கிரவாண்டிக்கு ரூ.20 லட்சம் பரிசு, விருது

சிறந்த பேரூராட்சியாக தேர்வான விக்கிரவாண்டிக்கு ரூ.20 லட்சம் பரிசு, விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2023-08-16 18:44 GMT

சென்னை

தமிழகத்தில் மொத்தம் 489 பேரூராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. பேரூராட்சிகளின் செயல்பாட்டை பாராட்டும் வகையில் தமிழக அரசு ஆண்டு தோறும் சிறப்பாக செயல்படும் முதல் 3 பேரூராட்சிகளை தேர்வு செய்து, சுதந்திர தின விழாவில் விருது மற்றும் பரிசு வழங்கிவருகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டு பேரூராட்சியில் சுகாதாரம், துப்புரவு பணி, வரி வசூல், கழிவறை வசதி, வளர்ச்சி திட்ட பணிகள் இவற்றில் முதலிடம் பிடித்த விக்கிரவாண்டி பேரூராட்சி தமிழ்நாட்டில் சிறந்த முதல் பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல்சலாம், செயல் அலுவலர் ஷேக் லத்தீப் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகையாக ரூ.20 லட்சம் பரிசு ஆகியவற்றை வழங்கினார். விருது பெற்று வந்த பேரூராட்சி தலைவர் அப்துல் சலாமுக்கு துணைத்தலைவர் பாலாஜி, நியமனக்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு மற்றும் கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்