வாலிபரிடம் நூதன முறையில் ரூ.13.14 லட்சம் மோசடி

நெல்லையில் வாலிபரிடம் நூதன முறையில் ரூ.13.14 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-12 19:23 GMT

நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் வாட்ஸ்-அப்பில் ஆன்லைன் வேலை தொடர்பாக ஒரு லிங்க் வந்தது. அந்த இணைப்பில் சென்று பார்த்தபோது, பல்வேறு வங்கி கணக்குகளில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை உண்மை என்று நம்பிய சார்லஸ், அந்த வங்கி கணக்குகளில் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.13 லட்சத்து 14 ஆயிரத்தை செலுத்தினார். எனினும் அவருக்கு லாபமும் கிடைக்கவில்லை, செலுத்திய பணமும் திருப்பி கிடைக்கவில்லை. இதனால் நூதன முறையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சார்லஸ் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்