கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் - செப்டம்பர் 5 ம் தேதி தொடக்கம்

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் 5 ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-08-29 12:20 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் 5 ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உதவித் தொகை பெறுவதற்கு 90 ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் எண்ணிக்கையை இறுதிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்