கரூர் புத்தக திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

கரூர் புத்தக திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-08-30 18:10 GMT

கரூரில் புத்தக திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 50 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகளும், 10 ஆயிரம் கல்லூரி மாணவ-மாணவிகளும், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் என மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர். 115 அரங்குகள் கொண்ட புத்தக கண்காட்சியில் ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் மாவட்ட அரசுப்பள்ளிகளுக்கும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி நூலகங்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இதுவரை ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 473 மதிப்புள்ள 3,293-க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொடையாளர்கள் வழங்கினார்கள். ஊரக வளர்ச்சித்துறையின் நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் கீழ் 10 வகையான மரக்கன்றுகள் 3,960 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்