அரசு பள்ளிகளுக்கு ரூ.8½ லட்சம் தளவாட பொருட்கள்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அரசு பள்ளிகளுக்கு ரூ.8½ லட்சம் தளவாட பொருட்கள் வழங்கப்பட்டன.;

Update: 2022-06-18 19:28 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலை பள்ளியில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளிக்கு தேவையான தளவாட பொருட்களான இரும்பு பெஞ்ச், பீரோ, டேபிள் சேர், தேக்கு மர நைலான் சேர், புத்தக ரேக் உள்ளிட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்களை க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

இதேபோல் சின்னவளையம் அரசு உயர்நிலை பள்ளியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் (2021-2022) பெஞ்ச் மற்றும் டெஸ்க் ரூ.2 லட்சத்து 53 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் தலைமை ஆசிரியரிடம் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் கழக சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் (வட்டார ஊராட்சி), ஜெயங்கொண்டம் தலைமை ஆசிரியர் ராஜ்குமார், சின்னவளையம் தலைமை ஆசிரியர் ச.கொளஞ்சியப்பன், ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் சுமதி சிவக்குமார், நகராட்சி துணை தலைவர் வெ.கொ.கருணாநிதி, நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்