ரூ.8 கோடியில் உள்விளையாட்டு அரங்கம்
வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் ரூ.8 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்படுகிறது.
வேலூர்
வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள் நலனுக்காக உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியே விடுதிகள் ரூ.8 கோடியே 60 லட்சத்தில் கட்டப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் 10 கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.