வேலை வாங்கி தருவதாக ரூ.7¼ லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக ரூ.7¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

Update: 2023-01-08 19:39 GMT


காரியாபட்டியை சேர்ந்தவர் தீபக்குமார். இவர் பெங்களூருவில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது நண்பர் கர்ணன் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த ஹரிணி (வயது 23) என்பவரும், சண்முகா நகரை சேர்ந்த கார்த்திக் (32) என்பவரும் அறிமுகமானார்கள். இவர்கள் இருவரும் தீபக் குமாருக்கு ஸ்பெயின் நாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் தர வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதனை நம்பிய தீபக்குமார் கடந்த செப்டம்பர் மாதம் வங்கி கணக்கு மூலம் ரூ.7 லட்சத்து 26 ஆயிரத்தை மேற்படி இருவரிடமும் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் இதுவரை வேலை வாங்கித்தராமலும் பணத்தை தரமறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தீபக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ஹரிணி மற்றும் கார்த்திக் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்