கோவை குற்றாலத்தில் போலி நுழைவு சீட்டு வழங்கி ரூ.58 லட்சம் மோசடி

கோவை குற்றாலத்தில் போலி நுழைவு சீட்டு வழங்கி ரூ.58 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக வனவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-01-20 18:45 GMT




கோவை குற்றாலத்தில் போலி நுழைவு சீட்டு வழங்கி ரூ.58 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக வனவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கோவை குற்றாலம்

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப் பகுதியில் கோவை குற்றால அருவி உள்ளது. இந்த அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் சாடிவயல் சோதனைச் சாவடியில் இருந்து வனத்துறை வாகனங்களில் அழைத்து செல்லப்படுகின்ற னர்.

இதற்காக பெரியவர்களுக்கு ரூ.60, சிறியவர்களுக்கு ரூ.30, கார் நிறுத்த ரூ.50, இருசக்கர வாகனம் நிறுத்த ரூ.20 கட்டணம் வசூலிக் கப்படுகிறது. இதற்கான டிக்கெட்டை (நுழைவுசீட்டு) சாடிவயல் சோதனை சாவடியில் உள்ள அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.

விசாரணை

இந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவுசீட்டு வழங்கிய தில் பல லட்சத்துக்கு முறைகேடு நடந்து உள்ளதாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இது குறித்து மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் உத்தரவின்பேரில், மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் மேற ்பார்வையில் போளுவாம்பட்டி வனச்சரக அதிகாரி சுரேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

ரூ.58 லட்சம் மோசடி

இதில் கடந்த 2021- ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மாதம் முதல் வாரம் வரை சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு சீட்டு வழங்கியதில் ரூ.58 லட்சம் மோசடி நடந்து இருப்பது தெரிய வந்தது.

மேலும் அதில் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இங்கு வனச்சரக அதிகாரியாக பணியாற்றிய சரவணன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2022-ம் ஆண்டு மே மாதம் வரை ரூ.23 லட்சமும், தற்போது வரை அங்கு வனவராக பணியாற்றி வரும் ராஜேஷ்குமார் என்பவர் ரூ.35 லட்சமும் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வனவர் ராஜேஷ் குமாரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் உத்தரவிட்டார்.

இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

வனவர் பணியிடை நீக்கம்

கோவை குற்றாலத்துக்கு செல்ல நுழைவு சீட்டு வழங்கும் இடத் தில் சுற்றுலா பயணிகளுக்கு போலி டிக்கெட் வழங்கி பணத்தை மோசடி செய்து உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத் தப்பட்டு வனவர் ராஜேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார்.

அவரிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு கோவை குற்றால சூழல் சுற்றுலா குழு கணக்கில் வரவு வைக்கப் பட்டது.

இந்த மோசடியில் தொடர்புடைய வனச்சரக அதிகாரி சரவ ணன், தற்போது மதுரை வனமண்டலம் ராமேஸ்வரத்தில் பணி யாற்றி வருகிறார்.

எனவே அவரை பணியிடை நீக்கம் செய்ய கோவை மண்டல வனபாதுகாவலர் மூலம் மதுரை மண்டல வன பாதுகாவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த மோசடி குறித்து காருண்யாநகர் போலீசில் புகார் அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்