1,100 பயனாளிகளுக்கு ரூ.54 கோடி கடன் உதவி

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 1,100 பயனாளிகளுக்கு ரூ.54 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.

Update: 2022-06-08 17:36 GMT

வேலூர்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வங்கிகளின் சார்பில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி வேலூர் மண்டல மேலாளர் பிரசன்னகுமார், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் அருண்விஜய், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் நிதிசார் கல்வி ஆலோசகர் ஜெயராம் அரசின் திட்டங்கள் மற்றும் கடன்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினார். இந்த முகாமில் அனைத்து வங்கிகளின் சார்பில் விவசாய கடன், தொழில் கடன், வீட்டு வசதி கடன், வாகன கடன், கல்வி கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் என பல்வேறு வகைகளில் 1,100 பயனாளிகளுக்கு ரூ.54 கோடியே 19 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.

முகாமில் ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் மோனிகண்டன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் உதவி பொது மேலாளர் அமித்அனு, கனரா வங்கியின் கோட்ட மேலாளர் சுப்பாரெட்டிகுணம், பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏரியா மேலாளர் ஸ்ரீநிவாஸ் மற்றும் அனைத்து வங்கிகளின் மேலாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்