திருச்சி விமான நிலையத்தில் ரூ.53½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.53½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-08-22 19:43 GMT

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவில் துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் அவரை தனியாக அழைத்து சோதனை செய்ததில் உடலில் மறைத்து 902 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.53 லட்சத்து 44 ஆயிரம் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்