வீட்டில் பதுக்கிய ரூ.50 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
வீட்டில் பதுக்கிய ரூ.50 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்படி, லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் மேற்பார்வையில், சமயபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் நேற்று சமயபுரம் நால்ரோட்டில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்பட்டதும், அதனை விற்றவர் சமயபுரம் ஜீவா நகரை சேர்ந்த வெங்கடேசன்(வயது 45) என்பதும் தெரியவந்தது. மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.