669 பேருக்கு ரூ.43 லட்சம் நலத்திட்ட உதவிகள்

ராமநாதபுரத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த 669 அமைப்புசாரா மற்றும் பனைமர தொழிலாளர்களுக்கு ரூ.43.48 லட்சம் நலத்திட்ட உதவித்தொகைகளை நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்கினார்.

Update: 2022-11-04 18:45 GMT

ராமநாதபுரத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த 669 அமைப்புசாரா மற்றும் பனைமர தொழிலாளர்களுக்கு ரூ.43.48 லட்சம் நலத்திட்ட உதவித்தொகைகளை நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

ராமநாதபுரத்தில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் அமைப்புசாரா மற்றும் பனைமர தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., பரமக்குடி முருகேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன்முறையாக பனைமர தொழிலாளர்கள் நல வாரியத்தை தொடங்கியவர் கருணாநிதி. அந்த வாரியம் மூலம் பனைமர தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது. இடையில் செயல்படாமல் முடங்கி இருந்த வாரியம் ஸ்டாலின் முதல் அமைச்சராக பொறுப்பேற்றபின் மீண்டும் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக்குளத்தில் மாநிலத்திலேயே அதிகளவு பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது.. இப்போது 53 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி தொகையாக ரூ.1.39 லட்சமும் பிற நலவாரியங்களில் பதிவு பெற்ற 616 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி தொகையாக ரூ.43.48 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரிய செயலாளர் திவ்யநாதன், தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், உதவி ஆணையர் பாரி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜாசேகரன், ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், நகர் மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், சமத்துவ மக்கள் கழகம் தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், ராமநாதபுரம் நாடார் பேரவை நிர்வாகிகள் மாவட்ட தலைவர் வேல்முருகன், மாவட்ட அவை தலைவர் ஜார்ஜ், மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், மாவட்ட பொருளாளர் மகேந்திரன் மற்றும் ஜெகன், பாண்டியராணி, மஞ்சுளா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்