ஆசிரியை வீட்டில் ரூ.4½ லட்சம் நகை திருட்டு

வடவள்ளி அருகே ஆசிரியை வீட்டில் ரூ.4½ லட்சம் நகை திருடப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-01-10 18:45 GMT

வடவள்ளி

வடவள்ளி அருகே ஆசிரியை வீட்டில் ரூ.4½ லட்சம் நகை திருடப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆசிரியை வீடு

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள சுண்டப்பாளையம் ஹரி ஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 42). இவர் வடவள்ளியில் உள்ள மருதமலை தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய கணவர் அன்பு சிவா. இவர் சென்னையில் தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.இவர்களது மகன் சர்வேஷ் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை வழக்கம்போல் பாக்கியலட்சுமி, தனது மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தானும் பணிக்கு சென்றார்.

12 பவுன் நகை திருட்டு

பின்னர் பாக்கியலட்சுமி மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 12 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.4½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாக்கியலட்சுமி வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்