விருத்தாசலத்தில் தொழிலாளி வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளை

விருத்தாசலத்தில் தொழிலாளி வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளை போனது.

Update: 2023-08-12 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் மணலூரை சேர்ந்தவர் கணேசன் மகன் பாலாஜி (வயது 22). தொழிலாளி. இவர் தினசரி இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள மாமா வீட்டிற்கு சென்று தூங்குவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு பாலாஜி தனது வீட்டை பூட்டிவிட்டு மாமா வீட்டிற்கு சென்றார்.

பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 10 பவுன் நகைகளை காணவில்லை.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. ,துகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்