விழுப்புரம் அருகே தொழிலாளி வீட்டில் ரூ.4 லட்சம் நகை- பணம் திருட்டு

விழுப்புரம் அருகே தொழிலாளி வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-09-07 18:45 GMT

விழுப்புரம் அருகே உள்ள வேட்டப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55), கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், இவருடைய வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பீரோவை நைசாக கள்ளச்சாவி மூலம் திறந்து அதிலிருந்த 9 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். திருட்டுப்போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்