குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் மோசடி; மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-10-05 18:45 GMT


விழுப்புரம் அருகே வேலியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நபர், பகுதி நேர வேலை விஷயமாக கூறி ஒரு லிங்கை அனுப்பி வைத்து அதில் வரும் ஓட்டல் ரெஸ்டாரண்டின் புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தால் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என்று கூறினார்.

அதன்படியே கார்த்திக், அந்த நபர் கூறியவாறு செய்து ரூ.203-ஐ பெற்றார். பின்னர் கார்த்திக்கை டெலிகிராம் ஐடி மூலம் தொடர்பு கொண்ட நபர், சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார். இதை நம்பிய கார்த்திக், தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி கணக்கிலிருந்து 10 தவணைகளாக ரூ.2 லட்சத்து 93 ஆயிரத்து 600-ஐ, அந்த நபர் கூறிய வங்கிகளின் கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் டாஸ்க் முடித்த பின்னரும் கார்த்திக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டார். இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்