மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி

பெரியகுளம் அருகே மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-06-27 18:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). இவர், தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், நான் டிப்ளமோ படித்துள்ளேன். நான் வேலை தேடி அலைந்தேன். இதை அறிந்த எனது ஊரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு எனக்கு அறிமுகம் ஆனார். அவர் என்னிடம் மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார். இதற்காக ரூ.3 லட்சம் தேவைப்படும் என்று தெரிவித்தார்.

இதை நம்பிய நான் அவர் கேட்ட பணத்தை கொடுத்தேன். அதன்பின்னர் அவர் வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார். எனவே வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்