அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3½ லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3½ லட்சம் மோசடி செய்த ௬ பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-09-16 19:25 GMT

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் தியாகராய நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 56). இவர் தனது மகன் சூரியராஜுக்கு அரசு வேலை வாங்குவதற்காக முயற்சி செய்துள்ளார். இந்த நிலையில் சாந்திக்கு இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் அறிமுகமானார். அப்போது அவர், சாந்தியிடம் உங்கள் மகனுக்கு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார். அதனை நம்பி சாந்தி ரூ.3.45 லட்சம் மற்றும் 4 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை கொடுத்ததாக கூறப்படுகிறது. வேலை கிடைக்காததால், சாந்தி கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால் மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் சாந்தியை தகாத வார்த்தையில் திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து உறையூர் போலீஸ் நிலையத்தில் செய்யப்பட்டது. அதன் பேரில் இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன், மீனா, ராஜேஸ்வரி, வசந்தி, இன்னொரு சாந்தி, மணிமேகலை ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்