மயிலத்தில் விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் திருட்டு

மயிலத்தில் விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் திருடியது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.;

Update: 2022-12-01 18:45 GMT

மயிலம், 

மயிலம் ஒத்தவாட தெருவை சேர்ந்தவர் பூபதி(வயது 55), விவசாயி. இவருடைய மனைவி ராஜகுமாரி(48). இவர் நேற்று காலை சொந்த செலவுக்காக வீட்டின் பீரோவில் வைத்திருந்த பணத்தை எடுக்க சென்றார். அப்போது, பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த மயிலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பூபதி மற்றும் ராஜகுமாரி ஆகியோர், விவசாய வேலைக்கு செல்லும்போது, பீரோ மற்றும் வீட்டு சாவியை வீட்டின் அருகே வைத்து செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது, யாரோ மர்மநபர், சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடி விட்டு மீண்டும், அதே இடத்தில் சாவியை வைத்துவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்