தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.3¼ லட்சம் நகை திருட்டு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.3¼ லட்சம் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2023-01-28 18:45 GMT

சிங்காநல்லூர்

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.3¼ லட்சம் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

தனியார் நிறுவன மேலாளர்

கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளையதாசன் (வயது 34). இவர் புனேயில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சசி.

இந்த நிலையில் சசி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூருக்கு சென்றார். பின்னர் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீடு திரும்பினார்.

நகை திருட்டு

அப்போது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அவர் ஒரு பையில் வைத்திருந்த வளையல்கள், செயின், மோதிரம் உள்பட 8½ பவுன் தங்க நகைகளை காணவில்லை. மர்ம நபர்கள் அதனை திருடியது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சசி தனது கணவரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து புனேவில் இருந்து கோவை திரும்பிய இளையதாசன் திருட்டு சம்பவம் குறித்து கோவை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்