செய்யாறு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை-ரொக்கம் திருட்டு

செய்யாறு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கதவை உடைத்த மர்மநபர்கள் ரூ.3 லட்சம் நகை, பணத்தை திருடிவிட்டு தப்பி உள்ளனர்.;

Update: 2023-10-21 18:45 GMT

செய்யாறு

செய்யாறு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கதவை உடைத்த மர்மநபர்கள் ரூ.3 லட்சம் நகை, பணத்தை திருடிவிட்டு தப்பி உள்ளனர்.

செய்யாறு தாலுகா பைங்கினர் கிராமம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 38). சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பிரியா என்கிற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

இவர்கள் கடந்த 2 தினங்களாக தங்களது வீட்டினை பூட்டி விட்டு கம்பன் நகர் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.

நேற்று அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சரவணன் வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சரவணன் மற்றும் அவரது மனைவி பிரியா வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டும் பின்கதவு திறந்த நிலையிலும் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் துணிகள் மற்றும் நகை வைத்திருந்த பெட்டியும் சிதறி கிடந்ததை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தனர். பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சரவணன், செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். செய்யாறு பகுதியில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்