பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் ரூ.27½ லட்சம் மோசடி
பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் ரூ.27½ லட்சம் மோசடி- பெண் கணக்காளர் மீது வழக்கு
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாம்பன்குளம் சின்னான் காலனி பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவருக்கு சொந்தமாக பணகுடி மெயின் ரோட்டில் பெட்ரோல் பங்க் உள்ளது. அங்கு பணகுடியைச் சேர்ந்த சிவஆனந்தி (வயது 28) என்பவர் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் வரவு-செலவு கணக்குகளை ஜெயலட்சுமி ஆய்வு செய்தார். அப்போது சிவ ஆனந்தி போலியாக வரவு-செலவு கணக்குகளை தயார் செய்து ரூ.27 லட்சத்து 65 ஆயிரத்து 525 மோசடி செய்தது தெரியவந்ததாக ஜெயலட்சுமி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் கொடுத்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் சிவஆனந்தி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.