திருச்சி விமான நிலையத்தில் செல்போனில் மறைத்து கடத்தி வந்த ரூ.22½ லட்சம் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் செல்போனில் மறைத்து கடத்தி வந்த ரூ.22½ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை பிடித்து சோதனை செய்ததில், செல்போனில் தகடு வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பயணியிடம் இருந்து 382 கிராம் எடையுள்ள ரூ.22 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.