தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரில் கட்டுக்கட்டாக ரூ.2,000 நோட்டுகள் - போலீசார் விசாரணை

தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரில் கட்டுக்கட்டாக ரூ.2,000 நோட்டுகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2024-09-13 17:22 IST

திருப்பத்தூர்,

சென்னையை சேர்ந்த அபிநரசிம்மன் என்பவர், திருப்பத்தூரில் இருந்து சென்னை நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாட்றம்பள்ளி அருகே வெலக்கல்நாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியுள்ளது.

இதையடுத்து உடனடியாக சுதாரித்துக் கொண்ட அபிநரசிம்மன், காரை நிறுத்திவிட்டு அதில் இருந்து வெளியேறினார். அடுத்த சில வினாடிகளில் காரில் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்த தகவலின்பேரில், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனிடையே, தீப்பற்றி எரிந்த காரில் கட்டுக்கட்டாக ரூ.2,000 நோட்டுகள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நோட்டுகள் அனைத்தும் போலியானவை என கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது குறித்து போலீசார் அபிநரசிம்மனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், தான் ஒரு சினிமா தயாரிப்பாளர் என்றும், படப்பிடிப்புக்காக அந்த போலி ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்