எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-06-12 21:18 GMT

செம்பட்டு:

தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் வரும் பயணிகளில் சிலர் கடத்தி வரும் தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்து வருகின்றனர்.

தற்போது வெளிநாடுகளுக்கு வியாபார காரணங்களுக்காக சென்று வருவதாக கூறி அங்கிருந்து தங்கத்தை கடத்தி வருவதும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மற்றும் அந்த நாடுகளில் உள்ள தரகர்கள் மூலம் தங்கம் கடத்தி வருவதும் வாடிக்கையாக உள்ளது.

பயணியிடம் விசாரணை

இந்த நிலையில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளை தீவிர சோதனை செய்தனர்.

இதில் அவர் கொண்டு வந்த வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்துவைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 20 துண்டுகளாக இருந்த 385 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்