நிலம் வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி

சின்னாளப்பட்டியில் நிலம் வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-08-01 19:45 GMT

மதுரை கிருஷ்ணாபுரம் நடராஜர் காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் சின்னாளப்பட்டி போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், நான் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த அய்யாதுரை என்பவரின் மகள் லட்சுமியை திருமணம் செய்துள்ளேன். இதனால் நாங்கள் சின்னாளப்பட்டி பகுதியில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட முடிவு செய்தோம். இதற்காக எனது மாமனாரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருமான அய்யாத்துரையை (65) தொடர்பு கொண்டேன்.

அவர் நிலம் வாங்கி தருவதாக கூறி என்னிடம் பல தவணைகளாக ரூ.20 லட்சம் வரை வாங்கினார். ஆனால் அவர் நிலம் வாங்கி தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் பணத்தை திருப்பி கேட்டபோது தராமல் மோசடி செய்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் அய்யாத்துரை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்