கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு

மதுரையில் கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.2 லட்சம் திருடப்பட்டது.

Update: 2023-05-01 19:06 GMT

மதுரை புதூர் இ.பி.காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவர் புதூர் அழகர்கோவில் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு மறுநாள் காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கடையின் பெட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்