வேனில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

வேனில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-21 18:14 GMT

மங்களமேடு:

புகையிலை பொருட்கள்

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த திருமாந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே ஒரு வேனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வதாக மங்களமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது வேனில் 21 மூட்டைகளில் 217 கிலோ புகையிலை ெபாருட்கள் இருந்ததும், அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

கைது

இதில் அவர்கள், கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, அரங்கூர் காலனி தெருவை சேர்ந்த சிங்காரவேலுவின் மகன் கார்த்திகேயன்(வயது 21), சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுகா ஸ்டேஷன் சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம்(39) என்பதும், இதில் கார்த்திகேயன் குரும்பலூர் அரசு அறிவியல் கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த மங்களமேடு போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்